News June 4, 2024
3,957 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கூட்டணி முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் சுற்று முடிவுகளின் படி,
கம்யூனிஸ்ட் சுப்பராயன்: 21,526
அதிமுக அருணாசலம்: 17,479
பாஜக முருகானந்தம்: 6,789
நாதக சீதாலட்சுமி; 3819
இந்தியா கூட்டணி வேட்பாளர் 3957 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. முதல் சுற்று முடிந்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி முன்னிலையில் வகிக்கிறது.
Similar News
News August 21, 2025
திருப்பூர் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில், மங்களம் சாலை மற்றும் சிறுபூலுவப்பட்டியை பகுதியை இணைக்க கூடிய வகையில், ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா ரவுண்டானா வருகின்ற பகுதியில், சோதனை அடிப்படையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 20.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடபட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News August 20, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், முருகம்பாளையம், கல்லம்பாளையம், சாமிநாதபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.