News January 29, 2026
394 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 394 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீஷியன், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. டிகிரி, டிப்ளமோ, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://iocl.com/apprenticships தளத்தில் பிப்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Similar News
News February 4, 2026
தாயுடன் உறவில் இருந்தவரை கொன்றுவிட்டு செல்பி

தாயுடன் முறையற்ற உறவிலிருந்த நபரை கொடூரமாக கொன்ற இளைஞர், அவரது உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த பெண் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட பசப்பாவை (54) கண்டித்துள்ளார். ஆனாலும், பசப்பா உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
News February 4, 2026
கில்லி, படையப்பா, மங்காத்தா: அதிகம் வசூலித்தது எது?

ரீ-ரிலீஸ் கலாசாரம் தமிழ் சினிமாவை தொற்றிக் கொண்டுள்ளது. பல்வேறு படங்களும் ரீ-ரிலீசாகி வரும் நிலையில், எந்த படம் அதிக வசூலை அள்ளியது என தெரியுமா? ரஜினியின் பர்த்டேவை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ ₹18 கோடி வசூலை குவித்ததாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அஜித்தின் ‘மங்காத்தா’ ₹21.5 கோடி வசூலித்துள்ளதாம். 2024-ம் ஆண்டு ரீ-ரிலீசான விஜய்யின் ‘கில்லி’ கிட்டத்தட்ட ₹32 கோடி வசூலித்துள்ளதாம்.
News February 4, 2026
அண்ணாமலை விலகல்.. மறைமுக காரணம் இதுவா?

தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதற்கு, நயினாருடன் நடக்கும் பனிப்போர்தான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில், வேறொரு மறைமுக உள்ளர்த்தமும் இதில் இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் சொல்கின்றனர். தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதாம். இதனால்தான் அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


