News June 4, 2024
3,90,412 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் தி.மு.க 5,37,879 வாக்குகள், அ.தி.மு.க 1,47,467 வாக்குகள், த.மா.கா 1,21,680 வாக்குகள், நாம் தமிழர் 1,19,286 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி 3,90,412 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தபால் வாக்குகள் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Similar News
News September 13, 2025
தூத்துக்குடி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

தூத்துக்குடி மக்களே செப்.13ம் தேதி முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
News September 13, 2025
மில்லர்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு – மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம் பகுதியில் குடிநீர் குழாய் செல்லும் பாதையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், சுந்தரவேல்புரம் பகுதியில் பூங்கா அமைத்து தருமாறும் வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் உடனிருந்தார்.
News September 12, 2025
தூத்துக்குடி மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

தூத்துக்குடி மக்களே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை அவசியாக தேவைக்கப்படும் ஆவணங்களாக உள்ளது. இவை தொலைந்துவிட்டால் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <