News July 22, 2024
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 39,000 பேர் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையிலான மோதலில் இதுவரை 39,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் போராக மாறிய சூழலில், காஸா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் அனைத்தையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
இலங்கை மீட்பு பணியில் இந்திய ஹெலிகாப்டர்கள்

<<18410040>>இலங்கை<<>> கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் இந்தியாவின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உதவுமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுள்ள இந்தியா, கொழும்புவில் நிறுத்தப்பட்டுள்ள INS Vikrant போர் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்காக அனுப்ப உள்ளது.
News November 28, 2025
உங்க குழந்தைகள் அதிகம் போன் பார்க்கிறார்களா?

குழந்தைகள் தற்போது ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துகின்றனர். தூங்காமல் கூட ரீல்ஸ் பார்க்கின்றனர். இது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், பார்வை பாதிப்பு, மனநிலை மாற்றம், நரம்பியல் பிரச்னைகளும் ஏற்படலாம். இதனை தடுக்க, 6-12 வயது பிள்ளைகள் குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த முக்கிய தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 28, 2025
நாளை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

டிட்வா புயல் எதிரொலியாக நாளை (நவ.28) நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ம் தேதி கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறையாகும்.


