News April 15, 2024
39 பந்துகளில் சதம்… புதிய சாதனை

RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் IPL வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கெயில் 30, யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டு நடப்பு தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஹெட்.
Similar News
News December 25, 2025
தமிழக மக்களை இப்படி சொன்னார்கள்: DMK MP

தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கிட்டு ஊர் நியாயம் பேசிட்டு இருக்காங்க, அவங்களுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும்னு பார்லிமெண்ட்ல பாஜககாரங்க பேசுனாங்க என்று சத்தியம் செய்து கூறியுள்ளார், தருமபுரி DMK MP மணி. 100 நாள் வேலை திட்ட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் MP பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், திமுகவினர் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
News December 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 560 ▶குறள்: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ▶பொருள்: ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
News December 25, 2025
நக்சலைட் ஆவதே குறிக்கோளாக இருந்தது: ஆதவ்

கல்லூரி பருவத்தில் அரசியல்வாதிகளை பார்த்தால் துப்பாக்கி எடுத்துச் சுட வேண்டும் என்று ஒரு கோபம் இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதனால் காலேஜ் முடித்துவிட்டு நக்சலைட் ஆக வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோளாக இருந்ததாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால், அந்த எண்ணத்தில் இருந்து தன்னை மாற்றியது பேராசிரியர் அலெக்ஸாண்டர் தான் என தனது ஆசிரியரையும் நினைவுகூர்ந்துள்ளார்.


