News December 1, 2024
381 இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது – மாநகராட்சி

சென்னையில் 381 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், 6 சுரங்க பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், இரவுக்குள் மழைநீரை வடியவைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
சென்னையில் இன்று மின்தடை

போரூர், இவிபி சந்தோஷ் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, ஈஞ்சம்பாக்கம், பி.ஜே.தாமஸ் அவென்யூ, ஈசிஆர், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், நேரு பூங்கா, கிண்டி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், ஐடிகாரிடார், பெருங்குடி தொழிற்பேட்டை, நீலாங்கரை சாலை, பாரிவாக்கம், திருவேற்காடு, ஆகிய பகுதிகளில் இன்று (ஆக.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.(SHARE)
News August 30, 2025
அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.62 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் விக்டோரியா பொது அரங்கத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டார். ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெறும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கமளிக்க கேட்டறிந்தார்.
ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் வி. சிவகிருஷ்ணமூர்த்தி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா உடனிருந்தனர்.
News August 29, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆக.29) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.