News September 11, 2024
3744 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பலர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு விண்ணப்பித்தனர். இதில் பரிசீலிக்கப்பட்டு வீடுகள் வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு பகுதியில் திருக்குமரன் நகரில் 1248, ஜெயா நகரில் 256, பாரதிநகரில் 288, திருமுருகன் பூண்டியில் 224, அவிநாசி சோலை நகரில் 448, வீரபாண்டியில் 1280 என மொத்தம் 3744 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 20, 2024
திருப்பூர் தலைப்புச் செய்திகள்
1.உடுமலை மலை கிராமத்தில் தொடரும் சோகம்
2.திருப்பூரில் 3நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்
3.போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!
4.உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
5.மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு
6.திருப்பூர்: 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
7.ஊத்துக்குளி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் பலி – விவசாயிகள் போராட்டம்
News November 20, 2024
திருப்பூரில் 3நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்
திருப்பூர் அஞ்சல் தெற்கு உட்கோட்டம் மற்றும் திருப்பூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நாளை நவ 21ஆம் தேதி தொடங்கி 23 தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது, குமரன் சாலையில் உள்ள லயன்ஸ் சங்க கட்டிடத்தில் நடக்கும் முகாமில் முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் கார்டு எடுப்பது போன்றவற்றை தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
News November 20, 2024
போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு நடந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்தார்.