News November 1, 2025
3,740 கோயில்களில் கும்பாபிஷேகம்: சேகர்பாபு

திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை 3,740 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர்களை ஓட வைத்த பெருமையும் திமுக அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Similar News
News November 1, 2025
BREAKING: கண்ணீர் விட்ட செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதால் கண்ணீர் சிந்தினேன், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்று செங்கோட்டையன் வேதனையுடன் கூறியுள்ளார். MGR, ஜெயலலிதா என அனைத்து தலைவர்களிடமும் விசுவாசமாக இருந்த தன்னை நீக்கும் முன், ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக இபிஎஸ், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் தான் எனவும், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
News November 1, 2025
திமுகவின் B டீமா? செங்கோட்டையன் விளக்கம்

திமுகவின் ‘B’ டீமாக தான் இல்லை, கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருப்பதாக செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கட்சியில் நீண்ட காலமாக இருந்த தன்னை ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கம் செய்திருப்பது வேதனையளிப்பதாக கூறினார். இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி அடைவதால் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்ததாக கூறினார்.
News November 1, 2025
சற்றுமுன்: மாத முதல் நாளிலேயே ₹1,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்ததால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது மீண்டும் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹166-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது.


