News January 7, 2025
1 Kiss சீனுக்கு 37 ரீடேக்

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன், 1 முத்தக்காட்சியில் நடிக்க 37 ரீடேக்குகள் வாங்கியதாக கடுப்புடன் தெரிவித்துள்ளார். கடந்த 2014ல் ‘Kaanchi: The Unbreakable’ படம் வெளியானது. இப்படத்தில் வரும் அந்த கிஸ் சீன் தனக்கு தலைவலியை ஏற்படுத்தியதாகவும், அந்த நேரத்தில் நடிகை மிஷ்டி சக்ரபோத்தி வேண்டுமென்றே தவறு செய்து ரீடேக் வாங்க வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News January 19, 2026
உலக சந்தையில் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,673-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $5 உயர்ந்து $93.75 ஆக உள்ளது. இதனால், இன்று(ஜன.19) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும். ஈரான், வெனிசுலா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச பிரச்னைகளே தங்கம் உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
News January 19, 2026
இனி ஜடேஜா வேண்டாம்..

NZ-க்கு எதிரான ODI தொடரில் ஜடேஜா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளையும் சேர்த்து வெறும் 43 ரன்களை மட்டுமே அடித்த அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அவரை ODI அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என பலரும் கமெண்ட் செய்கின்றனர். மேலும், அவருக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 19, 2026
அதிமுகவை வழிநடத்தும் CM ஸ்டாலின்: சேகர்பாபு

அதிமுக தேர்தல் வாக்குறுதியில், திமுகவின் முன்னெடுப்பை தான் பின் தொடர்ந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், சிந்தனையில் ஏதாவது இருந்தால் தானே புதிய திட்டங்களை சிந்திக்க முடியும்; அதிமுகவினருக்கு சிந்தனையில் ஒன்றுமே இல்லை என்றும் விமர்சித்துள்ளார். CM ஸ்டாலினின் வழிகாட்டுதலில் தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை இதிலிருந்து ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


