News March 9, 2025
11ஆம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 36 வயது பெண்!

மகாராஷ்ட்ரா, நாக்பூரில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கும், 3 பிள்ளைகளின் தாயான 36 வயது பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவனது பெற்றோர், சிறுவனை வேறு
இடத்தில் தங்க வைத்துள்ளனர். ஆனாலும், அப்பெண் மீது கொண்ட மோகத்தால், அச்சிறுவன் ஊரை விட்டு ஓடியுள்ளார். புகாரின் பேரில் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அப்பெண் மீது கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளனர். கலிகாலம்டா சாமி.
Similar News
News March 10, 2025
இன்றைய (மார்ச் 10) நல்ல நேரம்

▶மார்ச்- 10 ▶மாசி – 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 01:30 AM- 03:00 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶நட்சத்திரம் : பூசம்.
News March 10, 2025
ஒரே நாளில் ஒர் ஆண்டுக்கான மழை… 13 பேர் பலி

அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன்தினம் புயலோடு கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளத்தில் வீடுகள், ஹாஸ்பிடல்கள் மிதப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன.
News March 10, 2025
பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு இன்று தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கி ஏப்.4 வரை நடைபெற உள்ளது. முதலாவது அமர்வு கடந்த ஜன.31 முதல் பிப்.13 வரை நடந்தது. தொடர்ந்து, 2ஆவது அமர்வு கூட்டத்தில், மணிப்பூர் கலவரம், இந்தியாவை டிரம்ப் நிர்வாகம் கையாளும்விதம் உள்ளிட்டவைக் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில், இக்கூட்டத்தொடரில் வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.