News March 16, 2024
இஸ்ரேல் விமானத் தாக்குதலில் 36 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர். காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 31,533 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 73,546 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காசாவின் நசீரத் நகரில் இஸ்ரேல் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் பாலஸ்தீனியர்கள் 36 பேர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.
Similar News
News November 27, 2025
பிரபல தமிழ் நடிகைக்கு 2-வது திருமணம் ❤️(PHOTOS)

பிரபல தமிழ் நடிகை சம்யுக்தாவிற்கு கிரிக்கெட்டர் அனிருதா ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சம்யுக்தா ஷான், விஜய்யுடன் வாரிசு, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த் 2008- 15 வரை IPL-ல் விளையாடியுள்ளார். இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையினர் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News November 27, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வியால் டென்ஷனான EPS

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அதை அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்; அதிமுகவில் இல்லாத ஒருவர் குறித்து பதிலளிக்க முடியாது’ என்று இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால், கொங்குவில் கட்சியை பலப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
News November 27, 2025
மங்கும் WTC பைனல் கனவு!

SA-வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், 2027 WTC பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு இந்தியாவுக்கு குறைந்துள்ளது. பைனலுக்கு முன்னேற 60% புள்ளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 48.15% புள்ளிகளை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 டெஸ்டில் 6 வெற்றி, 2 டிரா அல்லது 7 வெற்றிகளை அடைய வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா உள்ளது. இந்தியா அடுத்ததாக இலங்கை, நியூசிலாந்து, ஆஸி. அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.


