News March 10, 2025

36 வழக்குகளுக்கு சமரச தீர்வு

image

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி செல்வன் ஜேசு ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஜீவனாம்ச வழக்குகள் காசோலை வழக்குகள் என 250 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றில் நிலுவையில் உள்ள 36 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ 68,51,500 பெற்று தரப்பட்டதாக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News October 30, 2025

விருதுநகரில் இலவச முழுமாதிரி தேர்வுகள்

image

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் – 3644 பணிக்காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு இலவச முழுமாதிரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நவ.01 அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

image

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 30, 2025

விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

image

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2025 ஆகும். ரயில்வே துறையில் பணியாற்ற இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!