News May 27, 2024

ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதி 35% அதிகரிப்பு

image

உக்ரைன் போரை காரணமாக வைத்து ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. எனினும், UAE வழியாக ரஷ்யாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2023-24ஆம் நிதியாண்டில் 65.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35.4% அதிகமாகும். இயந்திரங்கள், விமான உதிரிபாகங்களே அதிகம் ஏற்றுமதியாகியுள்ளன. மருந்து, தேநீர், காபி, புகையிலை ஏற்றுமதி குறைந்துள்ளது.

Similar News

News March 9, 2026

அதிமுகவிடம் 6 தொகுதிகளை கேட்கும் புரட்சி பாரதம் கட்சி

image

அதிமுக வரும் 12-ம் தேதி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியா, அல்லது தனிச் சின்னத்தில் போட்டியா என்பது அதன்பின் தான் தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 6 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ளதாகவும், 4 தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 9, 2026

சினிமா பாடலால் பொய்த்து போன காதல்.. அதிர்ச்சி!

image

காதல் கரம் பிடித்த கணவரின் சிறு பிடிவாதம், சேலம் ஆத்தூரை சேர்ந்த புவனேஸ்வரி(25) என்பவரை விபரீத முடிவெடுக்க வைத்துள்ளது. டிவியில் தனக்கு பிடித்த பாடலை வைக்க சொல்லி புவனேஸ்வரி, கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், கணவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து போன புவனேஸ்வரி, தனது 6 வயது மகனை தனியாக விட்டுட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அத்தனை வருட காதல், ஒரு பாடலால் பொய்த்து விட்டதா?

News March 9, 2026

இந்தியாவின் போர் நாயகன் காலமானார்

image

1965-ல் இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்ற Ex ராணுவ அதிகாரி KG ஜார்ஜ்(95) வயது மூப்பால் காலமானார். ராணுவ தொலைத்தொடர்பு பிரிவில் இருந்த அவர், போர் உச்சத்தில் இருந்தபோது வாகா எல்லையில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றினார். அவரது அர்ப்பணிப்பை பாராட்டி மத்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ், கடைசி காலத்தை கோட்டயத்தில் கழித்துவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

error: Content is protected !!