News February 16, 2025
35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது

ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 18, 2025
கிருஷ்ணகிரி: வர போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

கிருஷ்ணகிரி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
ஓசூர் அருகே நாட்டு வெடி விபத்தில் சிக்கிய 4 பேர்

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (40) தனது மாட்டுக்கொட்டகையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தீப்பொறி பறந்து நாட்டு வெடிகுண்டுகள் மீது விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பெரியசாமி, அவரது மனைவி புஷ்பா (36), மகன் சரண் (13), உறவினர் ஹரிஷ் (30) என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறது
News September 18, 2025
ஓசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஒசூா் அனைத்துக் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. ஒசூரில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றவும், வணிக மையம் அமைக்கவும், கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை இரயில்வே திட்டத்தை நிறைவேற்றவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.