News February 16, 2025
35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது

ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 23, 2025
கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

கிருஷ்ணகிரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணு
News October 23, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி நிலவரப்படி 206.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 29 மி.மீ மழையும், ராயக்கோட்டை 19 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, ஓசூர் 18.2 மி.மீ, நெடுங்கல் 16.4 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
News October 23, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள்<