News October 24, 2025
வங்கியில் 348 பணியிடங்கள்.. ₹30,000 சம்பளம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள 348 Executive பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி, வயது: 20- 30, சம்பளம்: ₹30,000. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. வரும் 29-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
Similar News
News October 24, 2025
இந்தியாவுக்கு வரமாட்டோம்: பாக்., அணி அறிவிப்பு

வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியா அல்லாத பொதுவான நாட்டில் தொடரை நடத்தினால், அதில் பங்கேற்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு மாற்றாக இன்னொரு அணி விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
News October 24, 2025
விவசாயிகள் கண்ணீர்… திமுக அரசே பொறுப்பு: அன்புமணி

விவசாயிகள் கதறி அழுது முறையிட்டபோதும், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் கண்ணீரை துடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளை கடனாளிகளாக மாற்றாமல், கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
News October 24, 2025
புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன் தெரியுமா?

புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியவர் பிரிட்டன் வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக். ஒரே நேரத்தில் பல்வேறு பகுதியில் புயல்கள் உருவாகலாம். குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே புயல்களுக்கு பெயரிடப்படுகிறது. புயலின் பெயரில் அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது. புயலின் பெயர் 8 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.


