News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
இந்தியா – ரஷ்யா இடையே ஆயுத ஒப்பந்தம்

ரஷ்ய அதிபர் புடின் வரும் 4, 5-ம் தேதிகளில் இந்தியா வருகை தர உள்ளார். அப்போது, ஆயுத கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவின் S-57 போர் விமானங்கள் மற்றும் S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நவீன தளவாடங்கள் இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News December 1, 2025
இனி இந்த பொருள்களின் விலை உயரும்!

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில், வரி சீர்திருத்தம் தொடர்பான 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பான் மசாலா மீதான வரி உயர்த்தப்படலாம். இதனால் இப்பொருள்கள் விலையேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர காஃபின் கலந்த குளிர்பானங்கள், தனி விமானங்களுக்கான வரியும் உயர்த்தப்பட உள்ளதாம்.
News December 1, 2025
மானுட அதிசயமே மீனாட்சி!

சிங்கப்பூர் சலூன், GOAT, லக்கி பாஸ்கர் படங்களில் கவனம் ஈர்த்த மீனாட்சி செளத்ரி ஒரு தீவிர போட்டோஷூட் பிரியர். வாரம்தோறும் புது புதிதாக போட்டோக்கள் எடுத்து, அதை SM-ல் பகிர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பார். அதேபோல இந்தவாரமும் மஞ்சள் காட்டு மைனாவாக மஞ்சள் உடையில் மினு மினுக்கிறார். புகைப்படங்களை பார்க்க மேலே Swipe செய்யவும்.


