News December 7, 2025
34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்கே: H ராஜா

திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கிடையே, H ராஜா முதன்மை ரோலில் நடித்துள்ள ‘<<18493915>>கந்தன் மலை<<>>’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இதுதொடர்பாக பேசிய H ராஜா, 1310-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆட்சி செய்த சுல்தான்கள், பல இந்து கோயில்களை இடித்தனர் என்றார். இதுதொடர்பாக 1930-ல் வழங்கிய லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில், 34 சென்ட்டை தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருப்பதாகவும் அவர் கூறினார்.
Similar News
News December 11, 2025
டெல்லி செல்கிறார் நயினார்

டிச.14-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பதற்காக அண்ணாமலை டெல்லிக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், நயினாரும் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது, கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
News December 11, 2025
SIR வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்

SIR-க்கு எதிரான வழக்குகளில், இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் இறுதியில் வழங்கப்படும் என SC தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியின் வழக்குகள் உள்பட பிரதான வழக்குகளின் விசாரணை வரும் 17, 18-ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக எந்த வழக்கும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகள் SC தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரிக்கப்பட உள்ளன.