News November 7, 2024
331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்பட்ட நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக 51 பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2024
பினாங்கிற்கு சென்னையில் இருந்து விமான சேவை
பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பினாங்கிற்கு, விமான சேவை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விமான சேவை தொடங்கப்படுகிறது.
News November 20, 2024
சென்னை மலர் கண்காட்சிக்காக தயாராகும் மலர் தொட்டிகள்
சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவிலிருந்து மலர் செடிகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுகிறது. ஊட்டியில் தாவரவியல் பூங்காவிலும் இதற்காக மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரு லட்சம் மலர் தொட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக தற்போது நடைபெறுகிறது.
News November 20, 2024
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.