News July 25, 2024
33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோட்டகுப்பம், விழுப்புரம், சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்பட 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் அம்பேத்கர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 25, 2025
விழுப்புரம்: துப்பாக்கி சுடுதல் போட்டி

விழுப்புரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தனியார் கல்லூரி பின்புறத்தில் வருகின்ற ஆகஸ்ட்.30ம் தேதி, 1ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வை விழுப்புரம் மாவட்ட துப்பாக்கி பயிற்சி விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
News August 25, 2025
விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
விழுப்புரம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது, இருக்கை பட்டையை (சீட் பெல்ட்) கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது விபத்துக்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.