News October 25, 2025
33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோயிலில் (அக்.25) சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆஞ்சநேயர், சீதா, லட்சுமணர் அனுமன் சமேத கோதண்டராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News February 12, 2026
திருவாரூர்: மளிகை கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மோசடி

தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் மர்மநபர் ஒருவர் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாகும் என கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகேயன், சிறுக சிறுக ரூ.10,37,571 பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன் திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 12, 2026
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், “சமூக வலைத்தளங்கள் மூலம் பரிசுகள், சலுகைகள் என்று அரசின் பெயரிலோ, முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதன் மூலம் உங்கள் விபரங்கள் திருடப்படலாம் எனவும் மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும்.” என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News February 12, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல், (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


