News March 1, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <
Similar News
News March 1, 2025
வீடு அல்லது நிலப் பத்திரம் தொலைந்து விட்டதா..?

அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்: FIR பதிவு செய்யுங்கள் *ஆங்கிலம், பிராந்திய மொழி நாளிதழில் விளம்பரம் கொடுக்கவும் *சொத்து பத்திரத்தின் நகலைப் பெற, பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் விபரங்கள், FIR நகல், செய்தித்தாள் விளம்பர நகலை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளியுங்கள் *நகல் பெறுவதற்கான கட்டணத்தை அலுவலகத்தில் Deposit செய்யுங்கள்.
News March 1, 2025
அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடும் நடிகர்

பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடுவேன் என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பேசியுள்ளார். தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்ட அவர், அண்ணாமலையுடன் இணக்கமாக இருக்கிறார். இந்நிலையில், அடுத்த பாஜக தலைவர் ஆகும் எண்ணம் இல்லையென்றும் இறுதி வரை கட்சிக்காக உழைப்பேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
News March 1, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மார்ச் 1) கிராமுக்கு ₹20 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 105க்கும், பார் வெள்ளி கிலோ 1,05,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. தங்கம் விலை சரிவு குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.