News September 25, 2025
விரைவில் 3,227 ஆசிரியர்கள் நியமனம்: அன்பில்

டெட் தேர்வு குறித்த தீர்ப்பை நினைத்து ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம், நான் இருக்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 2021 முதல் 8,388 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 3,227 ஆசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எங்கும் ஆசிரியர் இல்லாத வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 25, 2025
ஜடேஜாவின் உழைப்பை அங்கீகரித்த BCCI

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர், 1 சதம் 5 அரைசதங்கள் உள்பட 516 ரன்கள் குவித்து மிடில் ஆர்டரில் இந்திய அணியின் தூணாக விளங்கினார். இந்நிலையில், காயம் காரணமாக ரிஷப் பந்த் ஓய்வில் உள்ளதால், அவருடைய துணை கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
News September 25, 2025
School Fees கட்ட உதவித்தொகை: விண்ணப்பிக்கும் முறை

OBC, EBC, DNT சமூகங்களை சேர்ந்த 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பீஸ் கட்ட, ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்குகிறது PM YASASVI திட்டம். இதனை பெற, பெற்றோரது ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகையை பெற, https://scholarships.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 25, 2025
நாட்டை விட மோடியின் நலன் முக்கியமா? சோனியா காந்தி

பாலஸ்தீன விவகாரத்தில் மோடி அரசின் ஆழ்ந்த மௌனம், மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவின் நலன்களுக்காக இல்லாமல், மோடி – நெதன்யாகுவின் தனிப்பட்ட நட்புக்காக, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் நீதி, அடையாளம், மனித உரிமைகளுக்காக போராடும் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.