News March 25, 2025

321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.24) மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குவிந்தனர்.

Similar News

News April 20, 2025

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

image

உத்திரமேரூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக 1.2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அர்ஜுனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News April 20, 2025

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

image

குன்றத்தூரில், நேற்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் அளித்த 5 அறிக்கைகளில், “காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், ரூ.3.90 கோடியில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க நிதியுதவி ரூ.1-லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.

News April 20, 2025

மனித உரிமையை நிலைநாட்டக்கூடியது: முதல்வர்

image

குன்றத்தூரில் நேற்று (ஏப்ரல் 19) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தமிழ்நாட்டின் அனைத்து கைவினைக் கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டம், சமூகநீதி, மனித உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட கூடியது” என தெரிவித்தார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது” என்றார்.

error: Content is protected !!