News March 4, 2025
3,200 ஏக்கர் நிலங்களுக்கு 326.56 மில்லியன் தண்ணீர் திறப்பு

வீடூர் அணையிலிருந்து வீடூர், சிறுவை, ஐவேலி, பொம்பூர், கோரக்கேணி, எரையூர், கடகம் பட்டு, நெமிலி, புதுச்சேரி மாநிலம், புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், தேத்தம்பாக்கம், சுத்துக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட 3,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேற்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு மொத்தம் 326.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
விழுப்புரத்தில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா?

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார், திருப்பாச்சனுார் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.29) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. அதனால், பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், சேத்துார், அமாவாசைபாளையம், தி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லுார், கொண்டசமுத்திரம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு சுற்று பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
News November 28, 2025
விழுப்புரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் தற்கொலை!

விழுப்புரம்: வீரசோழபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகள் சரண்யா (வயது 22). இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி இறந்தார். சரண்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


