News August 3, 2024
பயங்கரவாதிகள் தாக்கியதில் 32 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், ஹோட்டல் ஒன்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஹோட்டலுக்குள் புகுந்த அல் ஷபாப், ஐஎஸ் பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்த பலரை பணய கைதியாகவும் பிடித்து வைத்திருந்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பணய கைதிகள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
Similar News
News October 26, 2025
BREAKING: திமுக கூட்டணியில் புதிய கட்சி

அடுத்த மாதம் 20-ம் தேதி புதிய கட்சி தொடங்கும் மல்லை சத்யா, திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். குறிப்பாக 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க தமது இயக்கம் பாடுபடும் என்றும் அறிவித்துள்ளார்.
News October 26, 2025
இன்று புழக்கத்தில் உள்ள டாப் 5 பழமையான நாணயங்கள்!

உலகத்தில் பல நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவற்றில் மிகவும் பழமையானது எது என உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பாருங்க. மிகவும் பழமையான நாணயங்களும், அவை எந்த நாட்டில் உருவாக்கப்பட்டன என்ற டாப் 5 லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். நம்மூரில் புழக்கத்தில் இருந்த ₹25 பைசா, ₹50 பைசாக்களை நீங்க யூஸ் பண்ணிருக்கீங்களா?
News October 26, 2025
UPDATE: ஷ்ரேயஸ் ஐயருக்கு என்ன ஆச்சு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ODI-யில் ஃபீல்டிங்கின் போது காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, அவர் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், அவர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-யில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


