News January 8, 2026

31 பந்துகளில் ருத்ரதாண்டவம்.. மிரட்டிய ஹர்திக்!

image

விஜய் ஹசாரே கோப்பையில், பரோடா வீரர் ஹர்திக் பாண்ட்யா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில், அவர் வெறும் 19 பந்துகளில் அரைசதம் விளாசினார். மொத்தமாக 31 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்து மலைக்க வைத்தார். இதற்கு முன்னர், விதர்பாவுக்கு எதிராக 92 பந்துகளில் 133 ரன்கள் (11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 2, 2026

சரிவில் இருந்து மீண்ட ரூபாய்!

image

டாலருக்கு எதிராக கடந்த சில நாள்களாக சரிவை சந்தித்து வந்த ரூபாய் இன்று புத்துயிர் பெற்றுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான வர்த்தகத்தில், 42 பைசா உயர்ந்து ₹91.53-ஆக உள்ள பாயின் மதிப்பு உள்ளது. RBI-ன் அறிவுறுத்தலின் பேரில் பொதுத்துறை வங்கிகள் டாலர்களை விற்றதன் மூலம் இது மீண்டது. மேலும், கடந்த 6 வாரங்களில் இத்தகைய குறிப்பிடத்தக்க உயர்வு ஒரே நாளில் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.

News February 2, 2026

சீனா ஆக்கிரமிப்பை பற்றி பேச ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

image

இந்தியாவின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் காந்தி பார்லிமெண்ட்டில் குற்றஞ்சாட்டினார். ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி MM நரவனேவின் சுயசரிதை புத்தகத்தை மேற்கோள்காட்டி ராகுல் பேச, வெளியிடப்படாத புத்தகத்தை அடிப்படையாக கொண்டு பேசக் கூடாதென சபாநாயகர் அனுமதி மறுத்தார். அத்துடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

News February 2, 2026

டிகிரி போதும்.. ₹48,480 சம்பளம்.. இன்றே கடைசி

image

யூகோ வங்கியில் 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும் *20- 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் *எழுத்துத் தேர்வு, குழு விவாதம் & நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும் *₹48,480 – ₹93,960 வரை சம்பளம் *விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். *விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

error: Content is protected !!