News April 21, 2025
31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1994 ஆம் ஆண்டு, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலைய படைவீரர் சவுத்ரி என்பவர், அவரது மனைவியை பாஸ்கர் ஜோதி கோகாயுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் 2ம் குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் அசாம் மாநிலத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, அரக்கோணம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
Similar News
News November 22, 2025
கலவை ஒழுங்கு முறை கூடத்தில் நெல் விற்பனை

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திமிரி ஒன்றியம் கலவை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிலத்தில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை விற்பனை செய்து வருவது வழக்கம். இந்நிலையில், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று (நவ.21) ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் மீனம்பூர் நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.3081க்கு விற்பனையானது.
News November 22, 2025
ராணிப்பேட்டையில் வேலை வாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர்.6ஆம் தேதி கலவையில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து முன் பதிவு செய்யலாம்.
News November 22, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


