News August 29, 2025
3,041 வன்கொடுமை வழக்கு.. தென் மாவட்டங்களில் அவலம்

TN-ல் தென் மாவட்டங்களில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 3,041 SC/ST வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது RTI மூலம் தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரையில் 514, தேனியில் 465 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், புதுக்கோட்டை – 440, திண்டுக்கல் – 364, சிவகங்கை – 327, திருநெல்வேலி – 309, தூத்துக்குடி – 284, ராமநாதபுரம் – 257, கன்னியாகுமரி – 81 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
SPORTS ROUNDUP: உலக சாதனை படைத்த ஜோகோவிச்!

◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, சீனாவின் காங்- சாங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
◆US ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ்(ஸ்பெயின்), சின்னர்(இத்தாலி) ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
◆கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அதிக முறை 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை ஜோகோவிச்(75 முறை) படைத்துள்ளார்.
News August 29, 2025
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. புதிய தகவல்

தமிழ்நாடு முழுவதும் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் CM ஸ்டாலின், ஜூலை 21-ல் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுத்த அவர் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், கடும் வெயில், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ராகுலின் பிஹார் பேரணியில் அவர் பங்கேற்றதால், லேசாக உடல்சோர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் எனவும் கூறப்படுகிறது.
News August 29, 2025
முதுகு வலியை விரட்டும் ‘அஸ்வ சஞ்சலாசனம்’

✦வேலையில் உட்கார்ந்தே இருப்பவர்களின் முதுகு வலிக்கு சிறந்த தீர்வு.
➥நெஞ்சு தரையை பார்த்த படி, கைகளை தரையில் ஊனி, இரு கால்களையும் பின்னோக்கி நீட்டி இருக்கும் நிலைக்கு வாருங்கள்.
➥மெல்ல மூச்சை உள்ளே இழுத்து, ஒரு காலை மட்டும் மடக்கி, கைகளுக்கு அருகில் வைக்கவும்.
➥15-20 விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.