News January 23, 2025
3,000 பேர் நாதகவில் இருந்து விலகல்

நாதகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். நாதகவில் இருந்து வெளியேறிய 3,000 பேர் நாளை CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். சீமான் மீதான அதிருப்தியாலும், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததைக் கண்டித்தும் 38 மாவட்ட நிர்வாகிகள், 2021 சட்டமன்றத்தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் உட்பட 3,000 பேர் திமுகவில் இணைகின்றனர்.
Similar News
News November 14, 2025
BIHAR ELECTION: தேஜ் பிரதாப் யாதவ் தோல்வி

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தோல்வியடைந்தார். மஹுவா தொகுதியில் தனது ஜன்ஷக்தி ஜனதா தள கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர், LJP(R) வேட்பாளர் சஞ்சய் குமாரிடம் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3-ம் இடம் பிடித்தார். ஆர்ஜேடி கட்சியின் முகேஷ் ரோஷன் இரண்டாம் இடம் பிடித்தார்.
News November 14, 2025
CINEMA ROUNDUP: ‘காந்தாரா’ வில்லன் தமிழில் அறிமுகம்

* ‘காந்தாரா சாப்டர் 1’ வில்லன் குல்ஷன் தேவய்யா, ‘லெகசி’ என்ற தமிழ் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் *மம்மூட்டி நடித்துள்ள ‘களம்காவல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பிரசன்னா-சினேகா சாமி தரிசனம் செய்தனர். *அர்ஜூன் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது. * ‘Non Violence’ படத்திலிருந்து ஸ்ரேயா நடனமாடியுள்ள பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டது.
News November 14, 2025
பட்ஜெட் கார்களுக்கு சூப்பர் சலுகைகள்

பட்ஜெட் கார் வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது பொன்னான நேரம். GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்திருக்கின்றன. மேலும், நவம்பரில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ₹10 லட்சம் பட்ஜெட்டில் உள்ள கார்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த கார் வாங்க பிளான் பண்ணுறீங்க?


