News August 14, 2024
INDIAN BANKல் 300 பணியிடங்கள்

அலுவலர் பணிக்கான அறிவிப்பை INDIAN BANK வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 300 பணி இடங்களில் தமிழகம், புதுச்சேரியில் 160 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தேர்வாகும் நபர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், தமிழகத்திற்குள் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.2, கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி, கூடுதல் விவரங்களுக்கு <
Similar News
News November 16, 2025
10.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

TN-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி டிச.12-ல் போராட்டம் நடத்தவுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரிக்கையும் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.17-ல் அன்புமணி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், இப்போராட்டத்தால் தமிழகமே குலுங்கும் என்று பேசியுள்ளார்.
News November 16, 2025
Delhi Blast: காரின் உரிமையாளர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த ஒருவரை NIA கைது செய்துள்ளது. வெடித்த காரின் விவரங்களை கொண்டு NIA விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அதன் உரிமையாளரான அமிர் ரஷித் அலி என்பவர் கைதாகியுள்ளார். இவர் குண்டுவெடிப்புக்கு காரணமான உமர் நபியுடன் இணைந்து தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
News November 16, 2025
ரஜினியை இயக்கும் தனுஷ்?

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை தனுஷ் இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்திருந்த நிலையில், ரஜினியிடம் தனுஷ் ஒன் லைனில் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதை விரிவாக்க பணிகளில் தனுஷ் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ரஜினியை யார் இயக்கினால் நன்றாக இருக்கும் ?


