News February 2, 2025
300 கிலோ ரேஷன் அரிசி ரயில்வே போலீசார் பறிமுதல்

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு விரைவு மற்றும் மின்சார ரயில்களில் அரிசி கடத்துவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு பிளாட்பாரங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 2, 2026
5.58லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நிதி உதவி,பேட்டரி சக்கர நாற்காலி,கம்மேடு சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.5.58 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (மார்ச்.2) வழங்கினார். மாற்றத்திறனாளி அலுவலர் செந்தில்குமாரி உடன் இருந்தார்.
News March 2, 2026
வாலாஜா வட்டாட்சியர் பொறுப்பேற்பு வாழ்த்து

வாலாஜா வட்டாட்சியராக நடராஜன் இன்று மார்ச் 2ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ,வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த வட்டாட்சியர் ஆனந்தன் ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.
News March 2, 2026
மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தேர்வு எழுதினார். பிளஸ் டூ தேர்வு இன்று மார்ச் 2ம் தேதி தொடங்கியது. மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் பதில் சொல்ல சொல்ல இன்னொருவர் தேர்வை எழுதினார் . அதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா உடன் இருந்தார்.


