News May 16, 2024
300 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் இருந்தது. மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று(மே 15) பெய்த கனமழை காரணமாக மரம் இன்று(மே 16) மரம் சரிந்து விழுந்தது. பழமை வாய்ந்த மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 3, 2026
கோவையில் சிறுநீர் கழிக்க சென்றவர் பலி!

கோவை மாவட்டம் பீளமேடு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர், அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் சிறுநீர் கழிக்க இன்று காலை தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது திடீரென கால்வாய்க்குள் விழுந்து அவர் உயிரிழந்தார். பீளமேடு போலீசார் நேரில் ஆய்வு செய்தபோது அவர் மரணமடைந்தது தெரியவந்தது. தற்போது போலீசார் உயிரிழந்தவர் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
News January 3, 2026
கோவை: ITI, டிப்ளமோ, டிகிரி முடித்தால் ரூ.60,000 சம்பளம்!

கோவை மக்களே, இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனத்தில், இளம் நிபுணர்கள் பதவிக்கான 215 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்படும் இப்பதவிக்கு டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 3, 2026
கோவை TNAU-வில் தேனீ வளர்ப்பு பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் (06.01.2026) அன்று நடைபெற உள்ளது. இதில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் தேனீக்கு உணவு தரும் பயிர்கள், தேனைப் பிரித்தெடுத்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


