News April 25, 2024
30 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் சாத்தியமா?

காங்கிரஸின் அறிக்கையில் புதிதாக 30 இலட்சம் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசுத் துறையில் வேலைவாய்ப்பினை தேடும் இளையோர்களை இந்த வாக்குறுதி ஈர்த்துள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட மொத்த மத்திய அரசுப் பணியிடங்களே 40 இலட்சம் தான் எனக் கூறப்படுகிறது. இவர்களை எந்தெந்த துறைகளில் வேலைக்கு அமர்த்துவார்கள்? எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Similar News
News January 23, 2026
உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து!

உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் குறுக்கு சாலையில், திருச்சி நோக்கிச் சென்ற வேனும் பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் (75) வந்த காரும் நேருக்கு நேர் மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் திருச்சியைச் சேர்ந்த ஜிராஜுதீன் (43) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த எறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 23, 2026
திருவாரூர்: திடீரென ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரித்து வரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வருவாய்த் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
News January 23, 2026
₹1,000 உதவித்தொகை.. இவர்களுக்கு கிடையாது

வேலைவாய்ப்பற்றோருக்கு TN அரசு மாதந்தோறும் ₹1000 வரை உதவித்தொகை வழங்குகிறது. இதனை பெற்றுவரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் உதவித்தொகை கிடைக்காது. அத்துடன், ஏற்கெனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. SHARE.


