News November 10, 2025
30% வாக்காளர்களை காணோம்: கடம்பூர் ராஜூ

தனது கோவில்பட்டி தொகுதியிலேயே 30% வாக்காளர்களை காணோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30% பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்; ஆனால், ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும் என்று சாடினார்.
Similar News
News November 10, 2025
துரைமுருகன் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தயாளு

கருணாநிதி எவ்வளவோ கூறியும் 1971 தேர்தலில் தான் போட்டியிட மறுத்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். அதன்பின், தன்னிடம் தயாளு அம்மாள், ஏன் சீட் வேண்டாம் என மறுக்கிறாய்; தேர்தல் செலவை பற்றி நீ கவலைப்பட வேண்டாம்; முதலில் நீ தேர்தலில் நில் எனக் கூறியதோடு, ₹10,000 கொடுத்தார். தான் அரசியலில் இவ்வளவு உச்சத்தில் இருக்க பிள்ளையார் சுழிபோட்டது ஸ்டாலின் தாயார் தயாளுதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
சற்றுமுன்: நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் த்ரிஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
News November 10, 2025
கடலில் மூழ்கிய படகு; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்

மியான்மரின் புத்திடாவுங்கிலிருந்து 300 குடியேறிகளுடன் புறப்பட்ட படகு தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே கடலுக்குள் மூழ்கியது. இச்சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி மாயமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல 2021-ல் மலேசியாவில், புலம்பெயர்ந்தோர் சென்ற கப்பல் மூழ்கியதால் 20 பேர் இறந்தனர்.


