News October 15, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி…

➤சீனாவும், ரஷ்யாவும் இணைந்து தைவான் எல்லையில் நேரடி கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டன. ➤மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். ➤வியாழன் கிரகத்தின் நிலவை ஆராய்வதற்காக ‘யுரோப்பா கிளிப்பர்’ விண்கலத்தை நாசா மையம் அனுப்பியுள்ளது. ➤இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளான லெபனானுக்கு UAE சார்பில் 450 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 17, 2025
திருமண விஷயத்தில் சச்சினை ஃபாலோ பண்ணும் மகன்!

அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. தற்போது அவர்களின் வயது வித்தியாசம் பேசுபொருளாகியுள்ளது. 1999 செப்., 24-ம் தேதி அர்ஜுன் பிறந்த நிலையில், சானியா 1998 ஜூன் 23-ம் தேதி பிறந்துள்ளார். அதன்படி, அர்ஜுனை விட சானியா ஒரு வயது மூத்தவர். சச்சின் தன்னை விட 5 வயது மூத்த அஞ்சலியை திருமணம் செய்த நிலையில், அவரது மகனும் அப்பாவை ஃபாலோ பண்ணுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
News August 17, 2025
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், வரும் 9-ம் தேதி அப்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், NDA கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா கவர்னராக உள்ள ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் PM மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு JP நட்டா அறிவித்துள்ளார்.
News August 17, 2025
‘PMVBRY’ திட்டத்தில் ₹15,000.. யார் யாருக்கு கிடைக்கும்?

PM Viksit Bharat Rozgar Yojana மூலம் புதிதாக வேலைக்கு சேருவோருக்கு ₹15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 31.7.2027 வரை 3.5 கோடி பேருக்கு ₹99,444 கோடி வழங்கப்படவுள்ளது. ₹1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இதில் பயன் பெறலாம். பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்கு பிறகு முதல் தவணையும், 12 மாத சேவைக்கு பிறகு 2-வது தவணையும் கிடைக்கும். அப்ளை செய்ய இங்கே <