News January 5, 2026
30 நிமிடம் நடந்தால் இவ்வளவு நன்மைகளா?

நடப்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க உதவுகிறதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். தினமும் 8,000 – 10,000 அடிகள் நடப்பதன் மூலம் 400 – 500 கலோரிகளை எரிக்க முடியும். காலை, மதியம், மாலை என்று பிரித்துக்கூட 30 நிமிடங்கள் நடக்கலாமாம். ஆனால் வழக்கத்தைவிட சற்று வேகமாக நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவுமாம்.
Similar News
News January 28, 2026
இந்தியாவின் வெற்றிநடையை தடுக்குமா நியூசிலாந்து?

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மறுபக்கம் தொடர் தோல்வியால் துவண்டிருக்கும் நியூசி., அணி இன்று வெற்றிக்காக போராடும். இன்னும் ஒரு வாரத்தில் டி20 WC தொடங்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுமே நிச்சயம் வரிந்துகட்டும்!
News January 28, 2026
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பிப்., 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் 2 முதல் 4-ம் தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. முன்னதாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
News January 28, 2026
தைப்பூசம்: இந்த ஒரு நாள் விரதமே போதும்

சூரபத்மனை அழிக்க பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானவேலை வழங்கிய நாளே தைப்பூசம் ஆகும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக, அனைத்து பக்தர்களும் 48 நாள்கள் விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தைப்பூச நாள் அன்று ஒருநாள் மட்டும் மனத் தூய்மையுடனும், முழு பக்தியுடனும் வழிபட்டாலே, முருகனின் முழு அருள் கிடைக்கும் என்பதே தைப்பூசத்தின் மைய கருத்து.


