News December 29, 2025

30 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை.. ஆனந்தத்தில் கிராமம்

image

இத்தாலியின் Pagliara dei Marsi என்ற கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. 20 பேர் மட்டுமே இருந்த ஊரில் ஸ்கூல்கள் மூடப்பட்டன, எங்கு பார்த்தாலும் முதியவர்கள் மட்டுமே காணப்பட்டனர். ஏன் இந்த கொடுமை என மனம் துவண்டு போனவர்களுக்கு, நம்பிக்கையை கொடுக்கும் விதமாக லாரா என்ற பெண் குழந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன் பிறந்துள்ளது. குழந்தையின் வருகையை உள்ளூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

தேனி: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News January 2, 2026

காங்கிரஸில் இருந்து விலகல்.. தவெகவில் இணைய முடிவா?

image

தமிழ்நாடு காங்கிரஸின்(TNCC) சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சூர்யபிரகாசம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் அடிமை கூடாரமாக TN காங்கிரஸை மாற்ற செல்வப்பெருந்தகை முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அண்மை காலமாக விஜய்க்கு ஆதரவாக சூர்யபிரகாசம் பேசிவந்தார். TNCC அழிவின் பாதையில் பயணிப்பதாக <<18740431>>ஜோதிமணி கூறியிருந்த<<>> நிலையில், சூர்யபிரகாசத்தின் விலகல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 2, 2026

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளித்த பங்குச்சந்தை

image

வார இறுதி நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 573 புள்ளிகள் உயர்ந்து, 85,762-க்கும், நிஃப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 26,328-க்கு வர்த்தகமாகியுள்ளது. மேலும் VI, HDFC Bank, Reliance, Coal India நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரம் ITC, Shriram Finance, Nestle உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு இன்று சரிவை சந்தித்துள்ளன.

error: Content is protected !!