News April 14, 2025
30 அடி பள்ளத்தில் விழுந்த கார்; 4 பேர் படுகாயம்

பெங்களூரூவை சேர்ந்த கிஷோர்குமார் (44) அவரது மனைவி நித்யா (35) மகன்கள் ஜோஸ்வா (13), ஜோயல் (11) ஆகிய நால்வரும் நேற்று (ஏப்.13) போடிமெட்டு வழியாக காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர். பூப்பாறை செல்லும் ரோட்டில் அதிவேகமாக சென்ற கார் வளைவில் திரும்பிய போது, நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் கார் தீப்பற்றி முழுதும் எரிந்தது. நால்வரும் க.விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
Similar News
News January 25, 2026
தேனி: போடி அருகே ஒருவர் மீது தாக்குதல்

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் நிலம் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த முன் விரோதத்தின் காரணமாக ஆசைத்தம்பி தூண்டுதலின் பேரில் கருத்தப்பாண்டி உள்ளிட்ட ஆறு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் கருத்தபாண்டியை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
News January 25, 2026
தேனி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

தேனி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 25, 2026
தேனியில் மோசடி செய்தவர் மீது வழக்கு

தேனியை சேர்ந்த பிச்சைமணி முகநூலில் கார் வாங்குவது குறித்து தகவல் தேடி வந்தார். அப்போது கோவையை சேர்ந்த பிரேம்சந்தர் என்பவர் தன்னிடம் ரூ.20.80 லட்சம் மதிப்பில் கார் உள்ளதாக கூறி பிச்சைமணியிடம் ரூ.2.50 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார். மீதி பணம் கட்ட பிச்சைமணி நேரம் கேட்ட நிலையில் பிரேம்சந்தர் காரை விற்றுவிட்டதாக கூறி பணத்தை தர மறுத்துள்ளார். இதுகுறித்து தேனி போலீசார் பிரேம்சந்தர் மீது வழக்குப்பதிவு


