News May 15, 2024
30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூரில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்ட நிலையில், 94.82 % தேர்ச்சி அடைந்து மாநிலத்தில் 6-வது இடம் பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளி , அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 79 மேல் நிலைப் பள்ளி உள்ள நிலையில், 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9488018205) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News November 27, 2025
பெரம்பலூர்: புதிய பேருந்து சேவை துவக்கம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருத்து – லப்பைகுடிகாடு, பென்னகரம், குரும்பாபாளையம், சில்லக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நான்கு பழைய நகர பேருந்துகளுக்கு பதிலாக, புதிய நான்கு நகர பேருந்துகளை துவக்கி வைத்தார்.
News November 27, 2025
பெரம்பலூர்: புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

நெற்குணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ( 27). இவருக்கு கோவையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுமாப்பிள்ளை மனோஜ் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


