News March 25, 2025

3 ரூபங்களில் காட்சியளிக்கும் முருகன்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியம் திருத்தலத்தில் மாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இத்தலத்தில் மூலவர் முருகன், காலை பாலனாக, நண்பகல் வாலிபனாக, மாலை வயோதிகனாக காட்சி தருவது சிறப்பாகும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.

Similar News

News March 29, 2025

வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர், திருத்தணி போன்ற இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 100 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.

News March 28, 2025

வேண்டிய வரம் அருளும் பெரியபாளையம் பவானி அம்மன்

image

ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

error: Content is protected !!