News March 9, 2025
சனி கவனிக்க போகும் 3 ராசிகள்!

சனி பகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், ரிஷபம், சிம்மம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மையை அள்ளிக் கொடுக்க போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
Similar News
News March 10, 2025
விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த ரோஹித்

டெஸ்டில் நியூசி., அணியிடம் தோல்வி.. ஆசி.,யிடமும் இதே நிலை.. இதுதவிர ஃபார்ம் இல்லாததால் பிரச்சனை.. ரோஹித்துக்கு CT தான் முடிவு என பலரும் விமர்சிக்க.. இதற்கெல்லாம் தனது கேப்டன்சியுடன் பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித். முன்னாள் வீரர்களின் பேச்சைக் கேட்காமல் 4 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்து முடிவு சரியானது என்பதை நிரூபித்தார். கோப்பையை வென்று அவரை விமர்சித்தவர்களை மூக்கின் மேல் விரல் நீட்ட வைத்தார்.
News March 10, 2025
ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.
News March 10, 2025
CUET PG நுழைவு சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வுக்கு 4,12,024 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்.1ஆம் தேதி வரை கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை <