News April 26, 2025
கடனை மிரட்டி வசூலித்தால் 3 வருஷம் ஜெயில்

கடன் வசூல் தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இதன்படி, தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கிய நிறுவனம் வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பிணையில் வரமுடியாத 3 ஆண்டு சிறைத்தண்டனையோ (அ) ₹5 லட்சம் அபராதமோ (அ) இரண்டுமே விதிக்கப்படலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News December 24, 2025
NZ tour of IND: நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசி., அணி 3 ODI, 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், இதற்கான அணியை நியூசி., அறிவித்துள்ளது. ODI போட்டிகளை பிரேஸ்வெல் தலைமையிலும், T20-ஐ சாண்ட்னர் கேப்டன்சியிலும் விளையாடவுள்ளது. இரு அணியிலும் கேன் வில்லியம்சன் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. சூர்யகுமார் தலைமையில் T20 போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
News December 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 24, மார்கழி 9 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 PM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 24, 2025
அவதார் படத்தில் சார்லி சாப்ளின் பேத்தி!

‘அவதார்: Fire & Ash’ படத்தில் கொடூர வில்லியாக மிரட்டிய ஊனா, லெஜண்ட் சார்லி சாப்ளினின் பேத்தி என்பது தெரியுமா? ஆம், இவரது குடும்பமே ஒரு கலை குடும்பம். இவரது தாயார் ஜெரால்டின் சாப்ளின் ஒரு நடிகை. இவரது கொள்ளு தாத்தா, நாடகத்தில் நோபல் பரிசு பெற்ற யுகேன் ஓ நீல். ஸ்பானிஷ் – பிரிட்டிஷ் நடிகையான ஊனா, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் சீரிஸில் தலிசா மேகிர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


