News June 27, 2024
₹10 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ₹10, ₹20 நாணயங்களை வாங்க மறுப்பதோ, செல்லாது எனக் கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். இன்றளவும் கிராமப்புறங்களில் ₹10 நாணயங்களை பலர் வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு ₹10 நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124Aஇன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
Similar News
News December 1, 2025
டிட்வா புயல்.. இன்று கனமழை பொழியுமா?

டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும். அதன் பிறகு மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் SIR பணிகள், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
News December 1, 2025
ரெப்போ விகிதம் மேலும் குறைகிறது?

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி, மேலும் 25பிபிஎஸ் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரெப்போ விகிதம் 5.5% உள்ளது. டிச.3 முதல் டிச.5 வரை நடைபெறும் RBI-ன் நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்படவுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் தணிந்துள்ளதால் இந்த குறைப்பு இருக்கலாம். அதேநேரத்தில் 2-வது காலாண்டில் நாட்டின் GDP 8.2% உயர்ந்திருப்பதால் மாற்றம் இல்லாமலும் போக வாய்ப்புள்ளது.


