News April 29, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News January 2, 2026
‘ரஜினி 173’ இயக்குநர் யார்? நாளை விடைதரும் RKFI

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ‘ரஜினி 173’ படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய பின், படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனிடையே படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு ரஜினி 173 குறித்த அறிவிப்பு வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News January 2, 2026
92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
News January 2, 2026
துணை ஜனாதிபதியுடன் EPS

இரண்டு நாள் பயணமாக இன்று காலை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு வந்தார். பின்னர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் சென்னை மக்கள் பவனில் அவரை EPS மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து நாளை காலை சி.பி. ராதாகிருஷ்ணன் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார்.


