News June 23, 2024

கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

image

தூத்துக்குடி அருகே முக்காணி பகுதியில் இன்று காலை சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் மோதியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால் தான் விபத்து ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News

News September 13, 2025

முதலில் எம்ஜிஆர், அடுத்து அண்ணா: விஜய்யின் வியூகம்

image

திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பாக பேசிய விஜய், அடுத்ததாக அரியலூரில் சற்றுநேரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். இப்போது பேசப்போகும் இடம் அண்ணா சிலை. 1967, 1977 ஆகிய 2 தேர்தல்களில் இந்த இருபெரும் தலைவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தைத் தான் விஜய் 2026-ல் எதிர்பார்க்கிறார். அதனாலேயே, பரப்புரையை அந்த தலைவர்களின் சிலை அருகே இருந்து தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

News September 13, 2025

பாலூட்டும் தாய்மார்கள் இதை மறக்க வேண்டாம்!

image

தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால், பால் சுரப்பது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 8 முறை வரை குழந்தைகளுக்கு பாலூட்டலாம். நீரிழப்பு தாய்ப்பால் சுரப்பை தடுக்கும். அதனால், உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஓட்ஸ், பச்சை இலை காய்கறிகள், பருப்பு, பாதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவும். தாய்ப்பால் கொடுக்காத சமயத்தில் பிரெஸ்ட் பம்ப் கருவியை பயன்படுத்துங்கள். SHARE IT.

News September 13, 2025

தாலிபான் தாக்குதலில் 12 பாக்., ராணுவ வீரர்கள் பலி

image

பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தானில், ராணுவ வாகனத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் இருந்தும், கடும் தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். எதிர்பாராத தாக்குதல் என்பதால் ராணுவத்தினரால் எந்த பதிலடியும் கொடுக்க முடியாமல், 12 வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய கும்பல் ராணுவத்தின் ஆயுதங்களுடன் அங்கிருந்த தப்பியது. தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ – தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

error: Content is protected !!