News April 30, 2025
அடுத்தடுத்த பாலில் 3 விக்கெட்! ஆனால் ஹாட்ரிக் இல்லை!

KKR இன்னிங்ஸின் 20-வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்ஸ் வீழ்ந்தன. DC-யின் ஸ்டார்க் வீசிய 3-வது பந்தில், ரோவ்மேன் பாவெல் LBW முறையில் அவுட்டாகினார். 4-வது பந்தில், அனுகுல் ராய் துஷ்மந்தா சமீராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து, ராணா டிரைவ் ஷாட் ஆட, Non-Striker ஆன்ட்ரே ரசல், கடைசியில் ரன் அவுட்டாகினார். இது தனிநபர் ஹாட்ரிக் இல்லை என்ற போதிலும், DC ‘டீம் ஹாட்ரிக்’-ஐ நிகழ்த்தியுள்ளது.
Similar News
News November 9, 2025
பிக்பாஸில் இரட்டை எவிக்ஷன்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்

BB தமிழ் சீசன் 9-ல் முதல் முறையாக ஒரே வாரத்தில் 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் ரம்யாவும், துஷாரும் எவிக்ட் ஆனதாக தகவல் பரவியது. தற்போது, துஷாரும், பிரவீன் ராஜ்தேவும் எலிமினேட் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. பிரவீன் ராஜ்தேவ் அன்அபிசியல் வாக்குப்பதிவில் லீடிங்கில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் எப்படி எவிக்ட் ஆனார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
News November 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 9, ஐப்பசி 23 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News November 9, 2025
களத்தில் படுகாயமடைந்த RCB கேப்டன்

இந்திய வீரரும், ஆர்சிபி கேப்டனுமான ராஜத் பட்டிதார் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் களம் காண மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான முதல் பயிற்சி டெஸ்டில் அவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் ராஜத் பட்டிதார் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் அவர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.


