News March 18, 2024

வெளிநாடுகளில் சாதனை படைத்த ‘3’

image

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘3’. அன்று சுமாரான வெற்றிப்பெற்ற இப்படம் சமீபத்தில் ரீ-ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் பிரான்சில் இப்படம் 2000 டிக்கெட்டுகள் விற்பனையாகி, அதிக டிக்கெட்டுகள் விற்பனையான தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. முன்னதாக பாபா 1000 டிக்கெட்டுகள் விற்பனையானது.

Similar News

News April 27, 2025

2025 சீசனுடன் தோனி ஒய்வு பெறுகிறாரா?

image

CSK கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், 2025 சீசனுடன் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து சில ரசிகர்களிடம் இருக்கிறது. ஒருவேளை அவர் ஓய்வு பெற்று விடுவாரோ என கேள்வி எழுந்த நிலையில், ஒரு ஹேப்பி நியூசை ரெய்னா கூறியுள்ளார். அடுத்த சீசனில், CSK சிறந்த திட்டமிடலுடன் வருவார்கள். தோனி கண்டிப்பாக இன்னும் ஒரு சீசன் விளையாடுவார் எனத் தெரிவித்துள்ளார். நீங்க சொல்லுங்க.. தோனி அடுத்த சீசனில் விளையாடலாமா?

News April 27, 2025

ஆண் நண்பருடன் நடிகை உல்லாசம்.. வீடியோ கசிந்தது

image

பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் நட்சத்திரம் சாஜல் மாலிக், ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பிரபலங்களின் அந்தரங்க வீடியோ அடிக்கடி கசிந்து வருகிறது. அந்த வரிசையில், சாஜல் மாலிக்கும் இணைந்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும், டிஜிட்டல் உலகில் தற்போது பாதுகாப்பே இல்லை என்று சாடியுள்ளனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 27, 2025

பஹல்காம் இந்து – முஸ்லீம் மோதல் அல்ல: காஜல் ஆவேசம்!

image

பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், ‘இது இந்து – முஸ்லீம் பிரச்னை கிடையாது, பயங்கரவாதத்திற்கும், மனிதநேயத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னை’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பிரிவினை எப்போதும் பயத்தையும், அதிக வெறுப்புணர்வையும் மட்டுமே உருவாக்கும் என சுட்டிக்காட்டி, இந்த சமயத்தில் தான் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!