News August 21, 2024

வாரத்திற்கு 3 முறை.. எந்த நோயும் கிட்ட வராது

image

உடலில் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகப்படுத்த முடியும். அதற்கு இந்த பானமே போதுமானது. 2 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மஞ்சள், 4 பூண்டு, சிறிது இஞ்சி, 4 வெற்றிலை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை 250 மி.லி. ஆக சுண்ட விட்டால் 4 பேர் குடிக்கலாம். வாரம் 3 முறை இதை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

Similar News

News March 25, 2026

ஏப்.3-ல் புதுச்சேரியில் PM மோடி ‘ரோடு ஷோ’

image

புதுச்சேரியில் NDA கூட்டணியை ஆதரித்து வரும் 3-ம் தேதி PM மோடி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், NR காங்., – பாஜக, காங்., – திமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், PM மோடியை பிரசாரத்திற்கு களமிறக்க திட்டமிட்ட பாஜக, வரும் 3-ம் தேதி ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக 27-ம் தேதி அமித்ஷா புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 25, 2026

வீரப்பனின் மகள், மனைவி ஒரே தொகுதியில் போட்டியா?

image

வீரப்பனின் மனைவி, மகள் இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக பேசிய வீரப்பனின் மகளும் நாதக வேட்பாளருமான திவ்யா, தனது தாய் அருகில் உள்ள வேறொரு தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியிலிருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தளி (அ) பென்னாகரம் தொகுதியில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

News March 25, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!