News February 11, 2025
காலையில் செய்யக்கூடாத ‘3’ விஷயங்கள்

*காலை எழுந்தவுடன், மொபைல் போனில் மூழ்கிட வேண்டாம். அது உங்களின் நேரத்தை வீணடிப்பதோடு, உங்கள் கண்களை காலையிலேயே சோர்வடைய செய்யும் *காலை உணவை எப்போதும் Skip பண்ணிட வேண்டாம். நாள் தொடங்கும் போதே, சுறுசுறுப்பாக இருக்க, காலை உணவு இன்றியமையாதது. அவசர அவசரமாக கிளம்பும்போதும், சாப்பிட்டு விட்டு கிளம்பவும் *காலையில் எழுந்ததும் புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கானது. இதனால் உடலின் Metabolism பாதிக்கும்.
Similar News
News March 4, 2026
பழி போட்டு முடக்க பார்க்கிறார்கள்: விஜய்

சமீபகாலமாக விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இதற்கு தஞ்சை கூட்டத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய், தன்னை முடக்கிவிடலாம் என எண்ணி தொடர்ந்து தன்மீது சிலர் பழி போடுவதாக பேசியுள்ளார். மேலும், இந்த விஜய்யை முடக்கிவிடலாம் எனவும் ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை எப்படி முடக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 4, 2026
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி.. சு.வெங்கடேசன் எதிர்ப்பு

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தில் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் MP கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் என குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தி திணிப்பு மட்டுமே என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழில் பெயர் சூட்டவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 4, 2026
சர்ச்சை விவகாரம்.. முதல் முறையாக விஜய் பேசினார்

தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ‘ஜன நாயகன்’ பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக விஜய் மௌனம் கலைத்துள்ளார். கரூர் விவகாரம் முதல் ஜன நாயகன்’ வரை தன்மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸ் பிரச்னையில் தனக்காக ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த CM ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.


